உள்ளூர் செய்திகள்

ஈரோடு ரெயில் நிலையம் முன்பு இன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

Published On 2023-11-08 08:36 GMT   |   Update On 2023-11-08 08:36 GMT
  • கார் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஈரோடு:

ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி.பாத்திர கடை வைத்துள்ளார். இன்று காலை பாலாஜி தனது மனைவி, குழந்தை, உறவினர்களை காரில் அழைத்துக் கொண்டு அவர்களை ஊரில் விடுவதற்காக ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்தார்.

பாலாஜி கார் நிறுத்தும் பகுதியில் காரை நிறுத்தி விட்டு சென்று விட்டார். பின்னர் உறவினர்கள், மனைவி, குழந்தையை ரெயிலில் ஏற்றிவிட்டு மீண்டும் காரை எடுக்க வந்தார்.

அப்போது காரின் என்ஜின் பகுதியில் இருந்து புகை வெளியேறுவதை கண்டு பாலாஜி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பாலாஜி காரை விட்டு வெளியே வந்தார். அப்போது கார் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் கலைச்செல்வன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடைத்து தீயை அணைத்தனர்.

தீப்பிடித்து எறிந்த காரை சுற்றி 50-க்கும் மேற்பட்ட கார்கள் இருந்தது. தீயணைப்பு வீரர்கள் உரிய நேரத்தில் வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதேபோல் பாலாஜியும் காரை விட்டு இறங்கியதால் அவரும் உயிர் தப்பினார்.

இதனால் ஈரோடு ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காரில் இருந்த பேட்டரி கசிவின் காரணமாக தீப்பிடித்து எரிந்தது தெரிய வந்தது.

Tags:    

Similar News