உள்ளூர் செய்திகள் (District)

தொலைதூர படிப்புகளுக்கு ஞாயிற்றுக்கிழமையில் தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம்

Published On 2023-01-17 02:39 GMT   |   Update On 2023-01-17 02:39 GMT
  • ஆகஸ்டு, செப்டம்பர்-2022-க்கான செமஸ்டர் தேர்வு அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது.
  • 30-ந்தேதி முதல் தேர்வு தொடங்கி நடக்கவுள்ளது.

சென்னை :

அண்ணா பல்கலைக்கழகம் அதன் கீழ் உள்ள தொலைதூரப் படிப்புகளில் ஆகஸ்டு, செப்டம்பர்-2022-க்கான செமஸ்டர் தேர்வு அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி, எம்.பி.ஏ., எம்.எஸ்சி., எம்.சி.ஏ. ஆகிய படிப்புகளுக்கான அட்டவணையில் ஞாயிற்றுக்கிழமையில் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 30-ந்தேதி முதல் தேர்வு தொடங்கி நடைபெறுவதாக வெளியிடப்பட்டு இருக்கும் அந்த பட்டியலில், அடுத்த மாதம் (பிப்ரவரி) 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சில தேர்வுகள் நடைபெறும் என்று கூறப்பட்டிருக்கிறது.

அந்தவகையில், அறிவுசார் சொத்து உரிமைகள், சில்லரை தளவாடங்கள், மருத்துவ சுற்றுலா, நீடித்த முதலீடுகள் மற்றும் நிதி முடிவுகள், வணிகத்தின் சட்ட அம்சங்கள், கூறுகள் சார்ந்த தொழில்நுட்பம், மின் வணிகம், தரவுத்தள மேலாண்மை அமைப்பு உள்பட சில பாடப்பிரிவுகளுக்கான தேர்வுகள் அடுத்த மாதம் 12-ந்தேதி நடைபெற இருக்கிறது.

வழக்கமாக படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு, பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வு ஆகியவைகள் தான் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும். ஆனால் தற்போது பட்டப்படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வும் ஞாயிற்றுக்கிழமையில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News