உள்ளூர் செய்திகள் (District)
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது
- சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,960-க்கு விற்பனையாகிறது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. கிராம் ரூ.66-க்கும் கிலோ ரூ.66 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது.
சென்னை:
சென்னையில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று கிராம் ரூ. 4,765-க்கு விற்பனையானது. இது இன்று ரூ.4,745 ஆக குறைந்துள்ளது.
பவுன் ரூ.38,120-ல் இருந்து ரூ.37,960 ஆக குறைந்துள்ளது. ஒரே நாளில் கிராம் 20 ரூபாயும், பவுன் 160 ரூபாயும் குறைந்துள்ளது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. கிராம் ரூ.66-க்கும் கிலோ ரூ.66 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது.