உள்ளூர் செய்திகள் (District)

2-வது நாளாக சரிந்த தங்கம் விலை

Published On 2022-07-07 05:10 GMT   |   Update On 2022-07-07 06:23 GMT
  • அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று முதல் குறையத் தொடங்கி உள்ளது. நேற்று பவுனுக்கு ரூ.520 குறைந்தது.
  • இன்று மீண்டும் ரூ.544 குறைந்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1064 குறைந்து உள்ளது.

சென்னை:

தங்கம் விலை இன்று 2-வது நாளாக குறைந்து வருகிறது. நேற்று தங்கம் பவுனுக்கு ரூ.520 குறைந்து ரூ.37,920-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு அதிரடியாக மேலும் ரூ.544 குறைந்து ரூ.37,376-க்கு விற்கப்படுகிறது. இன்று கிராமுக்கு ரூ.68 குறைந்து ரூ.4672-க்கு விற்கப்படுகிறது.

இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.62.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 10 காசு குறைந்து ரூ.62.40- க்கு விற்கப்படுகிறது.

கடந்த 1-ந் தேதி தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 15 சதவீதம் உயர்த்தியது. அதன்பிறகு தங்கம் விலை தொடர்ந்து உயரத் தொடங்கியது. கடந்த 30-ந்தேதி பவுன் ரூ.37,424-க்கு விற்கப்பட்ட தங்கம் 1-ந்தேதி அதிரடியாக ரூ.38 ஆயிரத்தை தாண்டியது.

அன்று பவுனுக்கு ரூ.856 அதிகரித்து ரூ.38,280-க்கு விற்கப்பட்டது. 2-ந் தேதி அது ரூ.38,336 ஆக உயர்ந்தது. 3-ந் தேதியும் அதே விலையில் நீடித்தது. கடந்த 4-ந் தேதி தங்கம் விலை மேலும் உயர்ந்து ரூ.38,384-க்கு விற்றது. 5-ந் தேதியும் தொடர்ந்து அதிகரித்து ரூ.38,440-க்கு விற்கப்பட்டது.

இந்தநிலையில் அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று முதல் குறையத் தொடங்கி உள்ளது. நேற்று பவுனுக்கு ரூ.520 குறைந்தது. இன்று மீண்டும் ரூ.544 குறைந்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1064 குறைந்து உள்ளது.

Tags:    

Similar News