உள்ளூர் செய்திகள்

ஊத்துக்கோட்டை ஜமாபந்தியில் 109 மனுக்களுக்கு உடனடி தீர்வு

Published On 2022-06-17 08:29 GMT   |   Update On 2022-06-17 08:29 GMT
  • ஜமாபந்தி நிறைவை முன்னிட்டு விவசாயிகள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • தீ விபத்தில் வீடு இழந்த பெண்ணுக்கு நிதி உதவி வழங்கினார்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 7-ந் தேதி தொடங்கியது. மாவட்ட வழங்கல் அலுவலர் ஜோதி, தலைமையில் தாசில்தார் ரமேஷ் முன்னிலையில் தொடர்ந்து நடைபெற்ற ஜமாபந்தி நேற்று மாலை முடி வடைந்தது.

வீட்டுமனை பட்டா, பட்டா மேல்முறையீடு, பட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, பெயர் சேர்த்தல், நீக்கல் முகவரி மாற்றம், முதியோர் உதவித்தொகை கேட்டு மொத்தம் 730 மனுக்கள் பெறப்பட்டன.

இதில் 109 மனுக்கள் ஏற்கப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது. 621 மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஜமாபந்தி நிறைவை முன்னிட்டு விவசாயிகள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வழங்கல் அலுவலர் ஜோதி தலைமை தாங்கினார். கும்மிடிபூண்டி எம்.எல்.ஏ. டி.ஜே. கோவிந்தராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வீட்டுமனை பட்டா உட்பட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும் தீ விபத்தில் வீடு இழந்த பெண்ணுக்கு நிதி உதவி வழங்கினார்.

நிகழ்ச்சியில் தாசில்தார் ரமேஷ், சிறப்பு தாசில்தார் லதா, வட்ட வழங்கல் அலுவலர் ரவி, துணை தாசில்தார் நடராஜன், கிராம நிர்வாக அலுவலர் யுகேந்திரன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் மாவட்ட தலைவர் சுந்தர்ராஜ் வட்ட தலைவர் கிருஷ்ணகுமார், வட்ட செயலாளர் பிரகாசம் பொருளாளர் ராஜூ, தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, ஊத்துக்கோட்டை பேரூராட்சி தலைவர் அப்துல்ரஷீத், துணைத் தலைவர் குமரவேல்.

வார்டு கவுன்சிலர்கள் அபிராமி, கல்பனா, பார்த்திபன், சமீமாரஹிம், ஒன்றிய கவுன்சிலர்கள் ஞானமுத்து, சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் செல்வ சேகரன், பெரிஞ்சேரி ரவி, சக்திவேல், மாவட்ட பிரதி நிதி ரவிக்குமார், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தில்லை குமார், சித்ரா பாபு, பொறுப்புக் குழு உறுப்பி னர்கள் சிவய்யா, சீனி வாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News