உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை மேலும் ரூ.3 உயர்வு

Published On 2023-04-17 06:55 GMT   |   Update On 2023-04-17 06:56 GMT
  • பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
  • கறிக்கோழி விலையை கிலோவுக்கு மேலும் மூன்று ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது .

நாமக்கல்:

நாமக்கல் ,சேலம், ஈரோடு, திருப்பூர், பல்லடம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணை உள்ளன. இந்த பண்ணைகளில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கறிக்கோழி விலையை கிலோவுக்கு மேலும் மூன்று ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது .

அதன்படி 102 ரூபாயாக இருந்தால் கறிக்கோழி விலை 105 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதே போல நாமக்கலில் முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முட்டை கோழி விலையை எழுபது ரூபாயில் இருந்து 72 ரூபாயாக உயர்த்தப்பட்டது .ஆனால் முட்டை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 410 காசுகளாக நீடிக்கிறது.

Tags:    

Similar News