உள்ளூர் செய்திகள்

யாரும் விண்ணப்பிக்க வேண்டாம்: கூட்டுறவு காப்பீட்டு நிறுவனம் பெயரில் போலியாக ஆட்சேர்ப்பு நடத்தி மோசடி- காஞ்சிபுரம் கலெக்டர் எச்சரிக்கை

Published On 2023-08-02 08:22 GMT   |   Update On 2023-08-02 08:22 GMT
  • இந்திய வேளாண் அமைச்சகத்தால் பயிர் காப்பீட்டு பணிக்காக பதிவு செய்யப்படாத ஒரு போலி நிறுவனம் ஆகும்.
  • போலியான விளம்பரங்களை நம்பி பசல் பீமா உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டாம்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

பாரதிய கூட்டுறவு பொது காப்பீட்டு நிறுவனம் என்னும் ஆட்சேர்ப்பு நிறுவனம் பயிர் காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதற்காக பசல் பீமா உதவியாளர்களை ஆட் சேர்ப்பு செய்வதாக போலியாக விளம்பரம் செய்து, ஆந்திர மாநிலத்தில் 829 பசல் பீமா உதவியாளர் பணியிடங்களுக்கு அழைப்பு விடுத்து விண்ணப்ப கட்டணமாக ரூ.250/- வசூலித்து உள்ளது தெரிய வருகிறது. இந்த நிறுவனம் இந்திய வேளாண் அமைச்சகத்தால் பயிர் காப்பீட்டு பணிக்காக பதிவு செய்யப்படாத ஒரு போலி நிறுவனம் ஆகும்.

எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் விண்ணப்பதாரர்கள் எவரும் பாரதிய கூட்டுறவு பொது காப்பீட்டு நிறுவனத்தால் பயிர் காப்பீட்டு பணிக்காக வெளியிடப்படும் போலியான விளம்பரங்களை நம்பி பசல் பீமா உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News