வேலூரில் ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடர்பாக நிர்வாகிகளுக்கு போலீசார் நோட்டீஸ்
- மாறாக குறிப்பிட்ட அரங்கு அல்லது மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளலாம் என போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
- கோர்ட்டு உத்தரவுபடி விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் வேலூர் மாநகர பகுதியில் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டிருந்தனர். முதலில் கலெக்டர் அலுவலகம் ஆஞ்சநேயர் கோவில் அருகில் இருந்து அண்ணா கலையரங்கம் வரை ஊர்வலமாக செல்ல அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்தனர்.
அதற்கு பிறகு ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஆனைகுளத்தம்மன் கோவில் அருகில் இருந்து அண்ணா கலையரங்கம் வரை பேரணியாக செல்ல அனுமதி கேட்டு மனு அளித்திருந்தனர்.
இதற்கும் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. மாறாக குறிப்பிட்ட அரங்கு அல்லது மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளலாம் என போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கோர்ட்டு உத்தரவுபடி விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்.வேலூர் மாவட்ட செயலாளர் நேதாஜி, தலைவர் சசிகுமார், அமைப்பாளர் கணேஷ் ஜி ஆகியோருக்கு போலீசார் விதிமுறைகள் அடங்கிய நோட்டீசை வழங்கி உள்ளனர்.
இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கூறுகையில்:-
வேலூரில் பேரணி நடத்துவது குறித்து தலைமையில் இருந்து எங்களுக்கு எந்தவிதமான உத்தரவும் இன்னும் வரவில்லை. மேலும் போலீசார் கூறும் விதிமுறைகள் படி பேரணி நடத்த முடியாது என்றனர்.