உள்ளூர் செய்திகள் (District)

சேலத்தில் போதை பொருள் கும்பலுடன் தொடர்பு வைத்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்

Published On 2022-08-07 10:33 GMT   |   Update On 2022-08-07 10:33 GMT
  • சேலம் மாவட்டம் வீராணம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருபவர் வேல்விநாயகம்.
  • வேல்விநாயகம் போதை பொருட்கள் கும்பலுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவர்கள் மூலமே, சேலம் மாநகரில் அதன் விநியோகம் நடப்பதாகவும் புகார் எழுந்தது.

சேலம்:

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விநியோகம் செய்யவும், விற்கவும் தமிழக அரசு தடை செய்துள்ளது. இதை மீறி விற்பவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி சேலம் மாவட்டத்தில் போதை பொருட்கள் பறிமுதல் வேட்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. குட்கா, புகையிலை பொருட்கள் பதுக்கியவர்கள், விற்பவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர்.

இந்த நிலையில் சேலம் மாவட்டம் வீராணம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருபவர் வேல்விநாயகம் (வயது 32). இவர் போதை பொருட்கள் கும்பலுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவர்கள் மூலமே, சேலம் மாநகரில் அதன் விநியோகம் நடப்பதாகவும் புகார் எழுந்தது.

இது குறித்து போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோதாவிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரை அழைத்து எச்சரித்து கமிஷனர் அனுப்பி வைத்தார். இருப்பினும் போலீஸ்காரர் வேல்விநாயகம் போதை பொருட்கள் கும்பலுடன் தொடர்ந்து தொடர்பு வைத்திருந்தார்.

இதை அறிந்த போலீஸ் கமிஷனர், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதற்கான நகல் வேல்விநாயகத்திடம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News