உள்ளூர் செய்திகள்

சட்டமன்றத்துக்குள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருக்கைகள் தொடர்பாக கடிதம் வந்துள்ளது- சபாநாயகர் அப்பாவு

Published On 2022-07-21 07:00 GMT   |   Update On 2022-07-21 07:00 GMT
  • அ.தி.மு.க. தலைமை கழக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது நீதிமன்ற தீர்ப்பு.
  • நீதிமன்ற தீர்ப்பு, தேர்தல் ஆணைய தீர்ப்பு குறித்து பேச மாட்டோம்.

நெல்லை:

தமிழக சபாநாயகர் அப்பாவு நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இது தமிழகத்துக்கு கிடைத்த பெருமை.

அ.தி.மு.க. சட்டமன்ற கொறடா எஸ்.பி.வேலுமணி எதிர்கட்சி துணைத் தலைவர் தொடர்பாக கடிதம் கொடுத்துள்ளார்.

நான் இன்னும் சென்னை செல்லவில்லை. அங்கு சென்ற பிறகு கடிதத்தை படித்து பார்த்து சட்டமன்ற விதிகளின்படி நடவடிக்கை எடுப்பேன்.

மேலும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை எந்தெந்த இருக்கையில் அமர வைக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் அவர்கள் கடிதம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. அதனை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பேன்.

அ.தி.மு.க. தலைமை கழக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது நீதிமன்ற தீர்ப்பு. நீதிமன்ற தீர்ப்பு, தேர்தல் ஆணைய தீர்ப்பு குறித்து நாங்கள் பேச மாட்டோம். சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து மட்டும் முடிவு செய்வேன்.

ஜனநாயக ரீதியில் சட்டமன்றம் நடைபெற்று வருகிறது. எனவே ஜனநாயக ரீதியில் முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News