உள்ளூர் செய்திகள் (District)

மீனாட்சி


மேலூர் நான்கு வழிச்சாலையில் விபத்தில் புதுப்பெண் பலி

Published On 2023-06-05 06:38 GMT   |   Update On 2023-06-05 06:38 GMT
  • விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • விபத்தில் படுகாயமடைந்த பால முருகனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலூர்:

மதுரை பழங்காநத்தம் நேரு நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது28). இவரும் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த மீனாட்சி(27) என்பவரும் 6 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

பாலமுருகன் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி மீனாட்சி தனது வீட்டின் அருகே உள்ள ஜெராக்ஸ் கடையில் வேலை செய்தார். மேலூர் அருகே உள்ள கீழவளவில் மீனாட்சியின் நண்பர் வீட்டு கிரகப் பிரவேசம் இன்று நடைபெறுகிறது.

அதில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு பாலமுருகனும், அவரது மனைவியும் மோட்டார் சைக்கிளில் மதுரையில் இருந்து கீழவளவு நோக்கி சென்றனர். மேலூர் அருகே தெற்கு தெரு என்ற இடத்தில் நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள் மீது மோதியது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர். அப்போது அவர்கள் மீது மோதிய வாகனத்தின் சக்கரம் மீனாட்சியின் தலைமீது ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். பாலமுருகன் படுகாயமடைந்தார்.

அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மேலூர் சப்-இன்ஸ்பெக்டர் பழனியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீனாட்சியின் உடலை கைப்பற்றி பிேரத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் படுகாயமடைந்த பால முருகனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News