தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலக சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
- 11 ஆண்டு காலமாக வழங்கப்படாமல் இருந்து வந்த, உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கான பணி பாதுகாப்பு ஆணை வழங்கப்பட்டது.
- முன்னாள் நிர்வாகிகளுக்கு அரசு பணி நிறைவு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநிலப் பொதுக்குழு மற்றும் நன்றி அறிவிப்பு பாராட்டு விழா மாநிலத் தலைவர் மு.சி.முருகேசன் தலைமையில் கோயம்புத்தூரில் நடைபெற்றது. காலை நடைபெற்ற பொதுக்குழுவில் கோயம்புத்தூர் உணவு பாதுகாப்பு அலுவலர் காமராஜ் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் அ.தி.அன்பழகன் வேலை அறிக்கையையும், மாநிலப் பொருளாளர் ஜான்சிம்சன் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். பொதுக்குழு உறுப்பினர்கள் விவாதங்களுக்கு ப் பின்னர் இரண்டு அறிக்கைகளும் ஏற்கப்பட்டது. மாநில நிர்வாகிகள் பி.நல்லத்தம்பி, வேலவன், ஸ்டாலின் பிரபு மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். கோயம்புத்தூர் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தமிழ்ச்செல்வன் வாழ்த்துரை வழங்கினார்.
முன்னாள் நிர்வாகிகள் போஸ் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோருக்கு அரசுப் பணி நிறைவு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. நிர்வாகிகள் தேர்தலில் மு.சி.முருகேசன் (கோவை) மாநிலத் தலைவராகவும், பி.நல்லத்தம்பி (கடலூர்) மற்றும் ஏ.முத்துராஜா (தென்காசி) மாநில துணைத் தலைவர்களாகவும், அ.தி.அன்பழகன் (நாகப்பட்டினம்) பொதுச் செயலாளராகவும், வி.காமராஜ் (கோவை) மற்றும் ரவிச்சந்திரன் (செங்கல்பட்டு) மாநில இணைச் செயலாளர்களாகவும், ஜான்சிம்சன் (செங்கல்பட்டு) மாநிலப் பொருளாளராகவும், வேலவன் (திருவள்ளூர்) தலைமை நிலையச் செயலாளராகவும் ஸ்டாலின் ராஜரெத்தினம் (விழுப்புரம்), மாநில அமைப்புச் செயலாளராகவும் ஜெயராஜ் (சென்னை) மற்றும் மோகன்தாஸ் (கோவை) மாநிலத் தணிக்கையாளர்களாகவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
11 ஆண்டு காலமாக வழங்கப்படாமல் இருந்து வந்த, உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கான பணிப் பாதுகாப்பு ஆணையை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் ஆணை பெற்றிட துணை நின்றவர்களுக்கும் நன்றி அறிவிப்பு பாராட்டு விழா நடைபெற்றது. நாகை மாலி எம்.எல்.ஏ மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் அன்பரசு ஆகிய இருவருக்கும் நன்றி தெரிவித்து, நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. மாநில பொதுச்செயலாளர் அ.தி.அன்பழகன் நன்றி கூறினார்.