பருத்தி சாகுபடி குறித்த தொழில்நுட்ப பயிற்சி
- எந்திரம் மூலம் அறுவடை செய்வதற்கு ஏதுவாக கோ 17 என்ற ரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.
- பருத்தி விதைச்சான்று நடைமுறைகள் மற்றும் அங்கக்சான்று எவ்வாறு செய்ய வேண்டும்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டாரம் சிமிலி கிராமத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் மாநில அளவிலான பருத்தி பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தான பயிற்சி நடைபெற்றது.
வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் வரவேற்புரை ஆற்றினார்.
அதனைத் தொடர்ந்து பயிற்சியின் பருத்தி சாகுபடி தொழில்நுட்ப கையேட்டை வெளியீட்டும் பருத்தி இடுபொருள் கண்காட்சியை துவக்கி வைத்து திருவாருர் மாவட்ட இணை இயக்குனர் லெட்சுமிகாந்தன் பேசுகையில்:-
பருத்தி நமது மாவட்டத்தில் முதன்மை பணப்பயிராக பயிரிடப்படுகிறது.
இயந்திரம் மூலம் அறுவடை செய்வதற்கு ஏதுவாக கோ 17 என்ற ரகத்தினை புதிதாக கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ரகம் மற்றும் இயந்திரம் மூலம் அறுவடை போன்ற தொழில் நுட்பங்கள் பயன்பாட்டிற்கு வரும் பொழுது விவசாயிகளுக்கு பெரும் பயனுள்ளதாக அமையும் என்றார்.
வேளாண்மை துணை இயக்குனர் (மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர்) ஏழுமலை பருத்தி சாகுபடி செய்யக்கூடிய வயல்களில் அதற்கு முன்னதாக மண் மாதிரி சேகரம் மற்றும் நீர் மாதிரி சேகரம் எவ்வாறு செய்தல் வேண்டும் என விரிவாக எடுத்துரைத்தார்.
வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) விஜயலட்சுமி பயிற்சி அளிக்கையில் பருத்திப்பயிரில் மண் பரிசோதனைக்கு ஏற்ப தலை மணி மற்றும் சாம்பல் சத்துக்களை இடவேண்டும் என்றும், உர அளவு, உரம் இடுதல் மற்றும் உர மேலாண்மை போன்ற தொழில்நுட்ப கருத்துகளை விளக்கமாக எடுத்துரைத்தார்.
வேளாண்மை உதவி இயக்குனர் (பயிர் காப்பீடு) ஹேமா ஹப்சிபா நிர்மலா பேசுகையில்,பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியாக வருகிற 31-ந் தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே உடனடியாக காப்பீடு செய்யும்படி கேட்டுக் கொண்டார் .மேலும் ஜெயப்பிரகாஷ் வேளாண்மை உதவி இயக்குனர் (விதை சான்று) பருத்தி விதைச்சான்று நடைமுறைகள் மற்றும் அங்கக்சான்று எவ்வாறு செய்ய வேண்டும் என்கின்ற தொழில்நுட்ப கருத்துகளை எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் இணை பேராசிரியர் அருள்செல்வி, நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்த்தில் ஸ்பிரேயர் பருத்தி நுன்னுட்டம், தார்ப்பாய் போன்ற பருத்திக்குத் தேவையான இடுபொருட்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
இப்பபயிற்சி முகாமில் சிமிலி ஊராட்சி மன்ற தலைவர் சிவசுப்பிரமணியன், வேளாண்மை அலுவலர் வெங்கடேஸ்வரன், துணை வேளாண்மை அலுவலர் ரவி, உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.