உள்ளூர் செய்திகள்

கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

Published On 2023-06-02 09:31 GMT   |   Update On 2023-06-02 09:31 GMT
  • இம்ரான்கான் தனது கள்ளக்காதலியை சந்தித்து அழைத்து செல்வதற்காக கோவை வந்தார்.
  • உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை,

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் இம்ரான்கான்(வயது26). கூலி தொழிலாளி.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு அவரது நண்பர் ஒருவரின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த கள்ளக்காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் கள்ளக்காதல் ஜோடியை கண்டித்தனர்.

இந்தநிலையில், சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்னையில், இம்ரான்கானின் கள்ளக்காதலி மட்டும் குடும்பத்தினரை பிரிந்து கோவைக்கு தனியாக வந்தார்.

அவர் உக்கடம் பகுதியில் வீடு எடுத்து தங்கியதாக தெரிகிறது. இதற்கிடையே தனது கள்ளக்காதலியை மறக்க முடியாமல் இம்ரான்கான் தவித்து வந்தார்.

இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இம்ரான்கான் தனது கள்ளக்காதலியை சந்தித்து அழைத்து செல்வதற்காக கோவை வந்தார்.

பின்னர் அவரை நேரில் சந்தித்து தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் அதற்கு அவர் வர மறுத்து விட்டார். இதனால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இம்ரான்கான் மிகுந்த மன வேதனை அடைந்து காணப்பட்டார்.

இதனையறிந்த அவரது தந்தை முகமத் ஹரூன் தனது மகனை அழைத்து செல்ல கோவை வந்தார்.

பின்னர் இருவரும் உக்கடம் பஸ் நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து சிங்காநல்லூர் சென்று மதுரை செல்வதற்காக புறப்பட்டனர்.

அப்போது உக்கடம் பஸ் நிலையத்தில் வைத்து இம்ரான்கான் அவரது தந்தைக்கு தெரியாமல் மதுவில் விஷம் கலந்து குடித்தார்.

பின்னர் இருவரும் பஸ்சில் ஏறி மதுரைக்கு சென்றனர். மதுரை அருகே செல்லும் போது, இம்ரான்கான் விஷம் குடித்த விவரத்தை தனது தந்தையிடம் கூறினார்.

இதை கேட்டு அவரது தந்தை அதிர்ச்சியடைந்தார். அவர் உடனே பஸ்சை நிறுத்தி மகனை பேரையூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News