உள்ளூர் செய்திகள்

திண்டிவனத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட காட்சி.

ஆர்.எஸ்.எஸ்.ஊர்வலத்தை முன்னிட்டு திண்டிவனத்தில் 23 இடங்களில் தற்காலிக கேமிரா: போலீசார் தீவிர கண்காணிப்பு

Published On 2023-11-19 06:48 GMT   |   Update On 2023-11-19 06:48 GMT
  • பெருமாள் கோவில் வீதி போன்ற முக்கிய வீதி வழியாக வந்து காந்தி சிலை அருகே ஊர்வலம் முடிவடைகிறது.
  • இரவு முழுவதும் போலீசார் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரம்:

தமிழகம் முழுவதும் நாளை ஆர். எஸ் .எஸ். ஊர்வலம் நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டம் திண்டி வனத்தில் ஆர். எஸ். எஸ். ஊர்வலம் திண்டி வனம் செஞ்சி ரோட்டில் ஆரம்பிக்கப்பட்டு திண்டி வனம் நேருவீதி, வேதங்கர் வீதி, ஆர். எஸ். பிள்ளை வீதி,பெருமாள் கோவில் வீதி போன்ற முக்கிய வீதி வழியாக வந்து காந்தி சிலை அருகே ஊர்வலம் முடிவடைகிறது. ஊர்வலம் வரும் பகுதி, நேரு வீதி, காந்தி சிலை, போன்ற 23 இடங்களில் தற்காலிகமாக கேமிராக்க ளை அமைத்து போலீசார் விடிய விடிய தீவிர கண்கா ணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் திண்டிவனம் செஞ்சி ரோட்டில் தற்காலிக மாக காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. இரவு முழுவதும் போலீசார் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். திண்டிவனம் டி.எஸ்.பி.சுரேஷ் பாண்டியன் தலைமையில் திண்டிவனம் முழுவதும் வாகன தணிக்கை யிலும் ரோந்து பணியிலும் போலீசார் ஈடுபட்டு வரு கின்றனர்.திண்டிவனத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடு வதாக போலீசார் வட்டா ரத்தில் தெரிவித்தனர். மேலும்கிறிஸ்தவ தேவா லயம், மசூதி, திராவிட கழக அலுவலகம் ஆகிய இடங்க ளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற னர்.

Tags:    

Similar News