உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் பரிசு வழங்கினார். அருகில் பழனிநாடார் எம்.எல்.ஏ., தென்காசி நகர்மன்றத் தலைவர் சாதிர், துணைத் தலைவர் சுப்பையா உள்ளிட்டோர் உள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம்

Published On 2023-10-06 08:58 GMT   |   Update On 2023-10-06 08:58 GMT
  • போட்டியில் மாணவி சிவமுத்துலெட்சுமி முதலிடம் பிடித்தார்.
  • மாணவன் அருண், மாணவி ராமலெட்சுமி ஆகியோரும் போட்டியில் வெற்றி பெற்றனர்.

தென்காசி:

தென்காசி மாவட்டம் இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் முன்னாள் சபாநாயகர்கள் ஆவுடையப்பன், செல்வராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

கருத்தரங்கில் நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது என்ற தலைப்பில் பேசிய தென்காசி மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி சிவமுத்துலெட்சுமி முதலிடம் பிடித்தார். இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 11-ம் வகுப்பு மாணவன் சக்தி 2-வது இடமும், முதலியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் முகம்மது சிராஜ் 3-வது இடமும் பிடித்தனர்.

மேலும் இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 11-ம் வகுப்பு மாணவன் அருண், பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பள்ளி பிளஸ்-2 மாணவி ராமலெட்சுமி ஆகியோரும் போட்டியில் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை முன்னாள் சபாநாயகரும், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாருமான ஆவுடையப்பன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியல் பழனிநாடார் எம்.எல்.ஏ., சட்டப் பேரவை கூடுதல் செயலாளர் நாகராஜன், இணை செயலாளர் சாந்தி, துணை செயலாளர் ரேவதி, சார்பு செயலாளர் வரதராஜன். தென்காசி நகர்மன்றத் தலைவர் சாதிர், துணைத் தலைவர் சுப்பையா, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பாஸ்கர், இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சதீஷ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News