உள்ளூர் செய்திகள்

வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகை செல்வத்திற்கு, மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் சான்றிதழ் வழங்கினார்.

குடும்ப கட்டுப்பாடு திட்டத்தில் இலக்கை மிஞ்சிய தலைஞாயிறு அரசு மருத்துவமனை

Published On 2023-01-14 08:56 GMT   |   Update On 2023-01-14 08:56 GMT
  • ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சையில் மாநிலத்தில் நாகை மாவட்டம் முதல் இடத்தை பிடித்தது.
  • ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சையில் இலக்கை தாண்டி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

வேதாரண்யம்:

நாகை மாவட்டத்தில் மருத்துவம், மக்கள் நலவாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நடைபெற்ற ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சையில் மாநிலத்தில் நாகை மாவட்டம் முதல் இடத்தை பிடித்தது.

குடும்ப கட்டுப்பாடு திட்டத்தில் வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு வட்டாரத்தில் ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சையில் இலக்கை தாண்டி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தலைஞாயிறு வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் தேவிஸ்ரீ, வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் நாகை செல்வன் மற்றும் மருத்துவமனை பணியாளர்களை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், துணை இயக்குனர் சுகாதார பணிகள் விஜயகுமார் இணை இயக்குனர் நலப்பணிகள் விஸ்வநாதன் மருத்துவ கல்லூரி முதல்வர் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News