மணப்பாடு திருச்சிலுவை நாதர் ஆலயத்தில் மகிமை பெருந்திருவிழா - கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
- மணப்பாடு கடற்கரையில் உள்ள திருச்சிலுவை நாதர்ஆலயம் தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற ஆலயமாகும்
- இங்கு ஆண்டு தோறும் மகிமை பெரும் திருவிழா 11 நாட்கள் நடைபெறும்.
உடன்குடி:
திருச்செந்தூர் அருகே உடன்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மணப்பாடு கடற்கரையில் மிகப்பெரிய மணல்குன்று உள்ளது. இந்த குன்றின் மீது உள்ள திருச்சிலுவை நாதர்ஆலயம் தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற ஆலயத்தில் ஒன்றாகும்.
ஆண்டு தோறும் இங்கு மகிமை பெரும் திருவிழா 11 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு 442-வது மகிமை பெரும் திருவிழாவையொட்டி இன்று காலை 4.30 மணிக்கு ஆலயத்தில் முதல் திருப்பலி நடந்தது. அதைத் தொடர்ந்து காலை 6.30 மணிக்கு மணவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான் செல்வம் மற்றும் ஏராளமான குருவானவர்கள் கலந்து கொண்டு மறையுரை, திருப்பலி மெய்யான சிலுவைஆசீர், அப்பம் வழங்கல் நிகழ்ச்சிகள் நடந்தது.
பின்னர் கோவில் கொடி மரத்தில் காலை 8.15 மணிக்கு கொடியேற்றப்பட்டு தொடர்ந்து திருப்பலிகள் நடந்தது. இதில் சுற்றுப்புற பகுதியிலிருந்தும் ஏராளமான பங்குமக்கள் கலந்து கொண்டனர்.
திருவிழா தொடங்கியதை யொட்டி தினசரி காலை, மாலை திருப்பலிகள் மறையுரை மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஒவ்வொரு நாளும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
விழாவில் முக்கிய நாளான வருகிற 13-ந் தேதி கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை வரவுள்ளதாகவும், அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படவுள்ள தாகவும் நிர்வாகிகள் தெரி வித்துள்ளனர். அன்று மாலை 7 மணிக்கு திருப்பலியும், மறையுரையும் நடைபெறும். விழாவில் நெல்லை, குமரி மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். அவர்கள் வந்து செல்ல வசதியாக 2 நாட்கள் சிறப்பு அரசு பஸ்கள் இயக் கப்படும்.
14-ந் தேதி காலை 4.30 மணிக்கு ஆலயத்தில் முதல் திருப்பலியும், பின்பு திருச்சிலுவைநாதர் ஆலயத்தில்மலையாள திருப்பலியும் 442-வது மகிமை பெரும் திருவிழா திருப்பலி 5 திருக்காய சபையினர் பவனி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.மாலை 5 மணிக்கு கொடி இறக்க திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை அருட்தந்தையர்கள் லரின் டிரேஸ், ஆரோக்கிய அமல்ராஜ், ரஷ்யன் மற்றும் மணப்பாடு சபை மக்கள் செய்துள்ளனர்.