உள்ளூர் செய்திகள்

ஆபத்தை உணராமல் பஸ்சின் பின்பக்க ஏணியில் பயணம் செய்யும் மாணவனை படத்தில் காணலாம்.

திண்டிவனத்திலிருந்து மரக்காணம் வரை பஸ்சின் பின்பக்க ஏணியில் பயணம் செய்த மாணவன் பெற்றோர்கள் அதிர்ச்சி

Published On 2023-07-21 09:29 GMT   |   Update On 2023-07-21 09:29 GMT
  • அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளன.
  • விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது வைரலாக பரவி வருகிறது.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளன. திண்டிவனம் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து பல்வேறு மாணவ மாணவிகள் இந்த பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ்சில் பயணம் செய்வது வழக்கம். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வந்து செல்லும் மாணவர்கள் பஸ்சில் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு மாணவன், பஸ்சினுள் அமர்ந்து பயணம் செய்ய இடமிருந்தும், பஸ்சின் பின்பக்கத்தில் உள்ள ஏணியில் பயணம் செய்தார். திண்டிவனம் மேம்பாலம் அருகேயுள்ள நேரு வீதியில் இருந்து மரக்காணம் வரை இந்த மாணவன் ஏணியில் தொங்கியபடி சென்று ள்ளான். இதனை சாலையில் சென்றவர்கள் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது வைரலாக பரவி வருகிறது. ஆபத்தை உணராமல் பஸ் பின்பக்க ஏணியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவன் குறித்து பெற்றோர்கள் தங்களின் அதிர்ச்சியை பதிவிட்டுள்ளனர். இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News