உள்ளூர் செய்திகள்

மதுபாட்டில்கள் கடத்தி வந்தவர் கைது

Published On 2022-11-18 07:40 GMT   |   Update On 2022-11-18 07:40 GMT
  • சோதனையில் அவர் மது பாட்டில்கள் கடத்தி செல்வது தெரியவந்தது.
  • இருசக்கர வாகனத்தில் இருந்த 100 மதுபாட்டில்கள் பறிமுதல்.

நாகப்பட்டினம்:

நாகையில் இரு சக்கர வாகனத்தில் பாண்டி சாராய பாட்டில்களை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர் நாகை மாவட்டத்தில் சாராய கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்று காலை தனிப்படை உதவி ஆய்வாளர் இரணியன் தலைமையிலான போலீசார் கூக்ஸ் ரோடு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு நபரை பிடித்து சோதனை செய்தனர் சோதனையில் அவர் மது பாட்டில்கள் கடத்தி செல்வது தெரிய வந்தது.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் மதுபானம் கடத்தி வந்தவர் செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (வயது 34) என்பது தெரிய வந்தது.

ரவிக்குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் இந்த 100 மதுபாட்டில்கள் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் இது தொடர்பாக வெளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News