உள்ளூர் செய்திகள்

அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

ரேஷன் கடை கட்டும் பணியை நிறுத்த கோரி அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Published On 2023-05-06 09:21 GMT   |   Update On 2023-05-06 09:21 GMT
  • சொசைட்டி காலனிக்கு என்று சிறுவர் பூங்கா மற்றும் வணிக வளாகம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
  • ஒதுக்கப்பட்ட சிறுவர் பூங்கா இடத்தில் குடியிருப்பவர்களின் எதிர்ப்பை மீறி கடை கட்டுவதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

தருமபுரி, 

தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பிடமனேரி பகுதியில் சொசைட்டி காலனி அமைந்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் தருமபுரி கூட்டுறவு கட்டிட சங்கம் லிட் கே.கே. 145 சார்பில் 72 வீட்டு மனை களாக பிரிக்கப்பட்டு அதில் 65-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டி குடியிருந்து வருகின்றனர்.

இந்த சொசைட்டி காலனிக்கு என்று சிறுவர் பூங்கா மற்றும் வணிக வளாகம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இலக்கியம்பட்டி பஞ்சாயத்துக்கு பிடமனேரி பகுதியில் உள்ள பொது மக்களுக்கு தனி ரேஷன் கடை கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலக்கியம்பட்டி பஞ்சாயத்து நிர்வாகம் அதற்கு உண்டான புறம்போக்கு இடத்தை தேர்வு செய்யாமல் சொசைட்டி காலனி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட சிறுவர் பூங்கா இடத்தில் குடியிருப்பவர்களின் எதிர்ப்பை மீறி கடை கட்டுவதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

ஏற்கனவே நகரப் பகுதியில் சிறுவர்களுக்கு என விளையாடுவதற்கு இடவசதிகள் இல்லாமல் சிறுவர்கள் தெருக்களில் விளையாடி வரும் நிலையில் சொசைட்டி காலனியில் இடம் ஒதுக்கப்பட்டும் அந்த இடத்தில் தற்போது ரேஷன் கடை கட்டுவது சொசைட்டி காலனி முதியோர்களுக்கும், சிறுவர்களுக்கும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News