- சி.சி.டி.வி. கேமிரா காட்சி அடிப்படையில் டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
- அவர்களிடம் இருந்து 10.5 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (60). கடந்த 6-ந் தேதி வெளியே சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இவர் கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இதேப்போல் தாலுகா, வீரப்பன்சத்திரம் பகுதிகளிலும் அடுத்தடுத்து நகை பறிப்பு சம்பவம் நடந்தது. இதையடுத்து அந்த பகுதியில் பொருத்த ப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சி அடிப்படையில் டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 14-ந் தேதி திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரிஹரன் (23), கோபிநாத் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 7.25 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதுசமயம் இவர்களுடன் சேர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த திருப்பூரை சேர்ந்த ஜனகராஜ் மற்றும் பிரபாகரனை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று வாகன சோதனையில் இருவரும் சிக்கினர். இதில் ஜனகராஜ் மட்டும் ஈரோட்டில் 8 இடங்களில் செல்போன், நகை பறிப்பில் ஈடுபட்டு உள்ளார். 9-வது முறையாக ஜனகராஜ் நகை பறிப்பில் ஈடுபட முயன்றபோது போலீசாரிடம் சிக்கியு ள்ளார்.
இவர்களிடம் இருந்து 10.5 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.