உள்ளூர் செய்திகள்

கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம்

Published On 2024-07-23 10:04 GMT   |   Update On 2024-07-23 10:04 GMT
  • கலெக்டரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
  • போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த, யாரும் வராததால், விடிய விடிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்:

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் டிஜிட்டல் கிராப் சர்வே பணியில் அதற்கான உபகரணங்கள் சர்வே உட்பிரிவு ஒன்றுக்கு ரூ.10 வழங்கும் பட்சத்தில் இப்பணியை செய்ய இயலும் என தீர்மானம் வழங்கிய நிலையில், இப்பணியை செய்யாத தொண்டமாநத்தம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமமூர்த்தியை எந்த ஒரு விளக்கமும் இல்லாமல், பணியிடை நீக்கம் செய்த கடலூர் கோட்டாட்சியரை கண்டித்தும், அவரை உடனடியாக பணியில் சேர்க்க வலியுறுத்தியும் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். மேலும் கலெக்டரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று மாலை முதல் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த, யாரும் வராததால், விடிய விடிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தற்போது வரை அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட செயலாளர் ஜெயராமன் கூறுகையில், கிராம நிர்வாக அலுவலர் ஜெயராம மூர்த்தி என்பவரை பணியிட நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்து அவருக்கு உடனடியாக ஆணை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களை அழைத்து போராட்டம் தொடர்ந்து நடைபெற உள்ளது என தெரிவித்தார்.

கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் 2-வது நாளாக இன்றும் தொடர்வதால் வருவாய் துறையின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News