வாறுகால்-சீரமைப்பு பணி காரணமாக மேடு, பள்ளங்களாக காட்சியளிக்கும் டவுன்- குற்றாலம் சாலை
- பேட்டையில் இருந்து டவுன் ஆர்ச் வரை சாலைகள் மோசமாக காணப்பட்டது.
- பணியை விரைந்து முடித்து தரமான தார்ச் சாலை அமைக்க வேண்டும்
நெல்லை:
நெல்லை மாநகர பகுதிக்குள் நுழையும் முக்கிய எல்லை பகுதிகளில் ஒன்றாக குற்றாலம் சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக தென்காசி மாவட்டத்தில் இருந்து தினமும் ஏராளமான வாகனங்கள் நெல்லை மாநகருக்குள் நுழைகிறது.
அதேபோல் நெல்லையில் இருந்து தென்காசி, குற்றாலம் செல்லும் கார்கள், வாகனங்கள், கேரளாவுக்கு செல்லும் வாகனங்களும் இந்த சாலையை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றன. இந்த சாலையின் இருபுறங்களிலும் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் இருப்பதால் தொண்டர் சன்னதி முதல் வழுக்கோடை வரையிலான சாலை ஒரு வழிப்பாதையாக செயல்பட்டு வருகிறது. அதன் பின்னர் இரு மார்க்க மாகவும் வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் அரியநாயகி புரம் கூட்டு குடிநீர்திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாதாள சாக்கடை, வாறு கால் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் காரணமாக பேட்டையில் இருந்து தொ ண்டர் சன்னதி, நயினார் குளம் வழியாக டவுன் ஆர்ச் வரையிலும் சாலைகள் மிகவும் மோசமாக காணப்பட்டது.
சுமார் 3 ஆண்டுகளாக அந்த சாலையில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகளும், அப்பகுதி குடியிருப்புவாசிகளும் மிகுந்த சிரமம் அடைந்து வந்த நிலையில் தொண்டர் சன்னதி முதல் டவுன் ஆர்ச் வரையிலும் தற்போது தார்ச் சாலை அமைக்கப் பட்டு சீரான போக்குவரத்து நடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
ஆனால் பேட்டையில் இருந்து தொண்டர் சன்னதி வரையிலும் உள்ள சாலையானது மேடு, பள்ளங்களாக காட்சி யளிக்கிறது. தற்போது கோடை மழை பெய்து வருவதால் அந்த சாலை போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. சேறும், சகதியுமாக காட்சியளிப்பதோடு, மேடு-பள்ளம் இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு மழைநீர் தேங்கி கிடக்கிறது என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
தற்போது நெடுஞ்சா லைத்துறை சார்பில் இருபுறமும் வாறுகால் அமைக்கும் பணி நடை பெற்று வரும் நிலையில், அந்த பணியை விரைந்து முடித்து தரமான தார்ச் சாலை அமைக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது. அந்த பணி தாமதம் அடையும் பட்சத்தில் தற்காலிகமாக பள்ளங் களில் ஜல்லிகளை கொட்டி சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.