மோசடியில் பணத்தை பறிகொடுத்த வியாபாரி- மீட்டு ஒப்படைத்த போலீஸ் சூப்பிரண்டு
- அடையாளம் தெரியாத வாட்ஸ்-அப் எண் மூலம் தொடர்பு கொண்டு சாட் செய்து டிரேடிங் பிசினஸ் பற்றி கூறியுள்ளார்.
- அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறி ரூ.1,20,000 மோசடி செய்தார்.
நாகப்பட்டினம்:
வேதாரண்யம் அகஸ்தியன்பள்ளியை சேர்ந்த கவிதரன் என்பவர் கடந்த சில மாதங்களாக பினான் ஆப்பு டிரேடிங் பிசினஸ் செய்து வந்துள்ளார். அதன் மூலமாக சிறு சிறு தொகை லாபம் கிடைத்து வந்துள்ளது.
அந்த சமயத்தில் சுனில் குமார் குப்தா என்ற அடையாளம் தெரியாத நபர் கவிதரனிடம் அடை–யாளம் தெரியாத வாட்ஸ் அப் எண் மூலம் தொடர்பு கொண்டு சாட் செய்து டிரேடிங் பிசினஸ் பற்றி கூறி அதில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகளை கூறி ரூ.1,20,000 மோசடி செய்தார். இது குறித்த புகாரின் பேரில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், நாகை சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்–கரசுவிடம் விசாரணை செய்ய உத்தரவிட்டார்.
விசாரணையின் அடிப்படையில் மோசடி செய்தவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது கண்டு–பிடிக்கப்பட்டது. மேலும் அவர் பயன்படுத்திய வங்கிக் கணக்கினை முடக்கிய சைபர் கிரைம் போலீசார் ரூ.1,20,000 பணத்தை மீட்டனர்.
மீட்ட பணத்தை கவிதரனிடம், போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஒப்படைத்தார். மேலும் மோசடி செய்த நபர் விரைவில் கைது செய்யப்–படுவார் என்று அவர் தெரிவித்தார்.