உள்ளூர் செய்திகள்

கோபபு படம்.

குச்சனூர் சனீஸ்வரர் கோவிலில் 4-ந் தேதி திருக்கல்யாணம்

Published On 2023-08-01 05:06 GMT   |   Update On 2023-08-01 05:06 GMT
  • திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 4-ந் தேதி சனீஸ்வர பகவானுக்கும், கும்பத்தில் காட்சியளிக்கும் அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும்.
  • 5-வது வார திருவிழாவான 19-ந் தேதி இரவு 9 மணிக்கு சிறப்பு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.

சின்னமனூர்:

தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனீஸ்வரர் கோவிலில் வருகிற 4-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த கோவிலில் ஆடி மாதத்தில் 5 வார திருவிழா ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன்படி விழா கடந்த 22-ந் தேதி தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 4-ந் தேதி சனீஸ்வர பகவானுக்கும், கும்பத்தில் காட்சியளிக்கும் அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். இதில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். திருக்கல்யாணத்தை தொடர்ந்து 3-ம் வார திருவிழாவில் சாமிக்கு சக்தி கரகம் எடுத்தல், மஞ்சனக்காப்பு சாத்துப்படி செய்தல், சுவாமி வீதி உலா, லாடசித்தர் பூஜை, முளைப்பாரி, கரகம் கலக்குதல், மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

மேலும் வருகிற 12-ந் தேதி 4-வது வார சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து 14-ந் தேதி இரவு பொங்கல் வைத்து சோனை கருப்பணசாமிக்கு மதுபான படையல் பூஜை நடைபெறுகிறது.

அன்று இரவு பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய ஆடு, சேவல் பலியிட்டு கறி விருந்து நடைபெறும். பிறகு 5-வது வார திருவிழாவான 19-ந் தேதி இரவு 9 மணிக்கு சிறப்பு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.

Tags:    

Similar News