உள்ளூர் செய்திகள்

திருமுருகன்பூண்டி - ஏ.வி.பி. பள்ளி ஆண்டு விழா

Published On 2023-01-19 10:25 GMT   |   Update On 2023-01-19 10:25 GMT
  • ஏ.வி.பி. டிரஸ்ட் செயலாளர் பொன்னுத்தாய் அருள்ஜோதி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
  • விழாவில் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

திருப்பூர் :

திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. பள்ளியில் 33-ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. ஏ.வி.பி. டிரஸ்ட் செயலாளர் பொன்னுத்தாய் அருள்ஜோதி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பொருளாளர் லதாகார்த்திகேயன் வரவேற்று பேசினார். தாளாளர் கார்த்திகேயன் தலைமை உரை ஆற்றினார்.

பள்ளியின் முதல்வர் பிரியாராஜா 2022-23-ம் கல்வி ஆண்டிற்கானஆண்டுஅறிக்கையை வாசித்தார். 33-ம் ஆண்டு விழா சிறப்பு விருந்தினராக சுகிசிவம் கலந்து கொண்டு பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் சிறந்த மாணவர்களை உருவாக்குவது எப்படி? என்பதை தன் வாழ்வியல் அனுபவங்கள் வழி நின்று விளக்கி கூறினார்.

மேலும் 2020 -21 ம்கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு கேடயங்கள் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளாக மாணவ, மாணவிகளின் கண்கவர் நடனங்கள் பார்ப்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. முடிவில் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு நன்றி கூறினார். விழாவில் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  

Tags:    

Similar News