சிதிலமடைந்த அரங்கநாதர் கோவில் புனரமைக்க வேண்டும்
- பொதுமக்கள் வலியுறுத்தல்
- 900 வருடம் பழமையானது
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த திருமால் பாடி கிராமத்தில் கி.பி.1136ல் பராந்தக சோழன் மகன் விக்கிரம சோழனால் கட்டப்பட்ட ஸ்ரீ அரங்கநாதர் கோவில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு சிதிலமடைந்த நிலையில் இருந்தது.
அந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் பல முறை அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்தவித பணிகள் நடைபெற வில்லை.
திருமால் பாடி கிராம பக்தர்கள் மீண்டும் கடந்த 2020-21-ம் ஆண்டு சட்டமன்ற பேரவை அறிவிப்பு மூலம் திருப்பணி செய்திட ரூ.70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தற்போது வரை எந்த வித நிதியும் வரவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்கள்.
மேலும் 900 வருடம் பழமையான கோவில் என்பதால் கோவில் புனரமைப்பு பணி செய்யப்படாமல் கோவில் கூரை மழையால் ஒழுகும் அவலம் உள்ளது.
மேலும் பல இடங்களில் பழைய கற்கட்டிடம் பாரம் தாங்காமல் விரிசல் விட்டு ஆங்காங்கே இரும்பு பைப் கொண்டு முட்டுகளும், சிமெண்ட் செங்கல்கள் கொண்டு தூண்களும் அமைக்கப்பட்டு மேல்கூரை தாங்கி பிடிக்க பட்டுள்ளது.
கோவில் பக்கவாட்டில் கோவில் கூரை பாரம் தாங்காமல் சிறிது இறக்கமாக காணப்படுகிறது.
உடனடியாக தற்போது அரசு நடவடிக்கை எடுத்து பழங்கால கோவிலை காக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.