குடிநீர் குழாய் பள்ளம் சீரமைக்கப்படுமா?
- வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி
- டெல்லியில் உள்ள அதிகாரிகள் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள அனைத்து தெருக்களில் வீடுகள் முன்பு குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்கு பள்ளம் தோண்டப்பட்டது. பள்ளத்தில் குடிநீர் குழாய் வைத்து, மூடப்பட்டுள்ளது.
தற்போது வீடுகள் முன்பு குடிநீர் குழாய் அமைக்காமல், தோண்டப்பட்ட பள்ளத்தை மூடாமலும் காலதாமதம் செய்து வருகின்றனர். இதனால் மிகவும் குறுகலாக உள்ள அனைத்து தெருக்களில் மோட்டார் சைக்கிள் உள்பட வாகனங்கள் செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றன.
பாதசாரிகள் கூட நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து கண்ணமங்கலம் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் கோவர்த்தனன் கூறும்போது:-
இந்த குடிநீர் குழாய் அமைக்கும் பணியை பார்வையிட டெல்லியில் உள்ள அதிகாரிகள் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.
இதனால் குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. அதன் பின்னர் சாலைகள் சீரமைக்கப்படும் என்றார்.