டி.எல். அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா
- சிறப்பு விருந்தினராக ஆழ்வை வட்டார வளர்ச்சி அதிகாரி நாகராஜன் கலந்து கொண்டு திருவள்ளுவர் படத்தினை திறந்து வைத்து வள்ளுவம் பற்றி எடுத்துரைத்தார்.
- டி.எல். அறக்கட்டளை காப்பாளர் பூபதி கல்விக்காக அறக்கட்டளை வழங்கும் நன்மைகள் பற்றி எடுத்துரைத்து மாணவர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொண்டார்.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் குருகாட்டூர் ஊராட்சியில் டி.எல். அறக்கட்டளை சார்பில் திருவள்ளுவர் உருவப்படம் திறப்புவிழா, நூலகத்திற்கு நூல்கள் வழங்கும் விழா, காலஞ்சென்ற முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்களின் படத்திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஜன்னத் புஷ்பராணி தலைமை தாங்கினார். உலக திருக்குறள் ஆய்வு மூதறிஞர் குழு இயக்குநர் திருக்குறள் ஜேம்ஸ்ராஜா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக ஆழ்வை வட்டார வளர்ச்சி அதிகாரி நாகராஜன் கலந்து கொண்டு திருவள்ளுவர் படத்தினை திறந்து வைத்து வள்ளுவம் பற்றி எடுத்துரைத்தார். டி.எல். அறக்கட்டளை காப்பாளர் பூபதி கல்விக்காக அறக்கட்டளை வழங்கும் நன்மைகள் பற்றி எடுத்துரைத்து மாணவர்கள். அதனை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டார். விழாவில் தாமிரபரணி இலக்கிய மன்றத் தலைவர் பிரிட்டோ அலெக்சாண்டர், மக்கள் செயற்பாட்டாளர் மாரிதுரைசாமி, ஒன்றிய கவுன்சிலர் தானி ராஜ் குமார், தலைமை ஆசிரியர்கள் நெல்சன், வயலோலா புஷ்பலதா, ஞானசுந்தரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்கள். நிகழ்ச்சிகளை ஊராட்சி துணத்தலைவர் ராஜ்குமார் தொகுத்து வழங்கினார். ஊராட்சி செயலர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார். விழாவில் ஏராளமான ஊர் பொதுமக்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.