உள்ளூர் செய்திகள்

திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம்

Published On 2023-06-08 07:06 GMT   |   Update On 2023-06-08 07:06 GMT
  • வைகாசி மாதம் பிரம்மோற் சவ திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • நேரு வீதியில் புறப்பட்ட தேர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் கோவிலில் வைகாசி மாதம் பிரம்மோற் சவ திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சி கள் நடைபெற்று வருகிறது.

வைகாசி மாத பிரம்மோற் சவ திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.கனகவல்லி தாயாருடன் லட்சுமி நரசிம்மர் பெருமாள் தேரில் எழுந்தருளினார். முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சி.வி.சண்முகம் எம்.பி. கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார். திண்டிவனம் நேரு வீதியில் புறப்பட்ட தேர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது. பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என முழக்கங்க ளுடன் உற்சாகமாக தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திண்டிவனம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தன்னார்வு தொண்டு நிறுவனம் சார்பாக பல்வேறு இடங்களில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. நகர செயலாளர் தீன தயாளன், மாவட்ட பொருளாளர் கே.வி.என். வெங்கடேசன், பி.ஆர்.எஸ். உரிமையாளர் ரங்க மன்னர், ராம் டெக்ஸ்டைல்ஸ் உரிமை யாளர் வெங்கடேசன் நிர்வாக அதிகாரி சூரிய நாராயணன், செயல் அலுவலகர் சிவசங்கர், ஒலக்கூர் ஒன்றிய துணைச் சேர்மன் ராஜாராம், கவுன்சிலர் லட்சுமி பிரபா மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News