நெடுஞ்சாலையோரம் மழைநீர், கழிவு நீர் செல்ல கால்வாய் அமைக்க வேண்டும்
- செந்தில்குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
- வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்
வாணியம்பாடி:
வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வளையாம்பட்டு பகுதியில், சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை உள்ளது.
இந்த சாலைக்கு அருகில் செல்லும் சர்வீஸ் சாலையில் ஏராளமான கழிவு நீர், மழை நீர் தேங்கி நிற்கிறது. இந்த வழியாக தினசரி 100-க்கும் மேற்பட்ட பஸ், லாரி மோட்டார் சைக்கிள்கள் செல்கின்றன.
மேடு பள்ளங்கள் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று வாணியம்பாடி தொகுதி எம் எல் ஏ கோ.செந்தில்குமார் அந்த இடங்களை ஆய்வு செய்து உடனடியாக மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்ல கால்வாய்களை அமைக்கவும், அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
ஆய்வின்போது வளையாம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி கவுண்டர் ஒன்றிய குழு உறுப்பினர் வசந்தி அருள்ராஜ், வார்டு கவுன்சிலர் எம். சத்தியப்பன், முன்னாள் கவுன்சிலர்கள் பாரதிதாசன், வரதன், செல்வராஜ் உட்பட பலர் உடன் இருந்தனர்.