உள்ளூர் செய்திகள்

போலீஸ் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டரை நியமிக்க வேண்டும்

Published On 2023-11-05 08:52 GMT   |   Update On 2023-11-05 08:52 GMT
  • பொதுமக்கள் வலியுறுத்தல்
  • பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைப்பெற்ற வண்ணம் உள்ளது

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் கடந்த ஏப்ரல் மாதம் பொறு ப்பேற்று க்கொண்டார். அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தது.

அதன்படி வடக்கு மண்டல ஐ.ஜி. நாட்ட றம்பள்ளி இன்ஸ்பெக்டர் மலரை கடந்த மாதம் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இதனையடுத்து வாணியம்பாடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி, நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டராக கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.

நாட்டறம்பள்ளி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆந்திரா மாநில எல்லையும் உள்ளது. இங்கு கஞ்சா விற்பனை, ரேஷன் அரிசி கடத்தல், மண் கடத்தல், கோவில் மற்றும் வீடுகளில் தொடர் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைப்பெற்ற வண்ணம் உள்ளது.

பொறுப்பு இன்ஸ்பெக்டர் பதவி வகித்து வருவதால் பல்வேறு வழக்குகள் முடிவ டையாமல் நிலுவையில் தேங்கி கிடக்கின்றன.

தற்போது தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை தினம் வருவதால் குற்ற செயல்கள் அதிகம் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு உடனடியாக இன்ஸ்பெக்டரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News