போதைப் பொருள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
- குழந்தை திருமண தடுப்புச் சட்டம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அருகே பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு, சைபர் கிரைம் மற்றும் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தர வின்பேரில், வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் அறிவுறுத்தலில் நாட்டறம்பள்ளி அருகே எல்லப்பள்ளி பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் போதை பொருள் தடுப்பு, சைபர் கிரைம் மற்றும் குழந்தைகள் திருமண தடுப்பு சட்டம் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் ஆகியோர் தலைமை தாங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் போலீசார் என பலர் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் தெரிவித்த 3 மாணவ மாணவிகளுக்கு இன்ஸ்பெக்டர் தனது சொந்த செலவில் ரொக்க பரிசு வழங்கினார்.