- ஏரியில் மீன் பிடித்ததால் ஆத்திரம்
- 4 பேரிடம் போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே சின்ன மூக்கனுார் கிராமம் புக்கா வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மணி மகன் பாண்டியன் (வயது25) இவர் பெங்களூரில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார்.
2 நாட்களுக்கு முன் ஜோலார்பேட்டைக்கு வந்த அவர் நேற்று முன்தினம் சின்ன மூக்கனுார் ஏரி ஏரியில் மீன் பிடித்து கொண்டு இருந்தார்.
அப்போது திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை நாராயணபுரம் பகுதியை சேர்ந்த ஆனந்தன் (வயது 45) மற்றும் சின்னமோட்டூர் பகுதியைச் சேர்ந்த நாகேஷ், முருகன், மற்றும் அன்பழகன் மனைவி விஜயா ஆகியோர் சேர்ந்து பாண்டியன் ஏரியில் மீன் பிடித்தது பார்த்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர்.
இதில் நிலை குலைந்து மயங்கி விழுந்த பாண்டியனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்துார் அரசு மருத்துவக் மனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து பாண்டியன் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் காதர் கான் பாண்டியனை தாக்கியதாக ஆனந்தன், அவரது சகோதரி விஜயா உறவினர்கள் நாகேஷ், முருகன் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.