உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட சுப்பிரமணி. மருந்து கடையில் மருத்துவ இணை இயக்குனர் மாரிமுத்து ஆய்வு செய்தபோது எடுத்த படம்

மருந்து கடையில் மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது

Published On 2023-02-26 09:00 GMT   |   Update On 2023-02-26 09:00 GMT
  • குழந்தை இல்லாத பெண்களுக்கு சிகிச்சை அளித்துள்ளார்
  • கடைக்கு சீல் வைத்தனர்

திருப்பத்தூர்:

ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்கின்ற (வயது 49) இவர் கச்சேரி தெரு பகுதியில் மணி மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார்.

இவர் மருத்துவ படிப்பு படிக்காமலேயே அவருடைய மெடிக்கல் ஷாப்பில் குழந்தை இல்லாத பெண்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்

மேலும் எம்பிபிஎஸ் டாக்டர்கள் கொடுக்காத அதிக வீரியம் வாய்ந்த மருந்துகளையும் கொடுத்து வந்ததாக பல்வேறு புகார்கள் வந்தது.

இதன் காரணமாக மருத்துவம் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஊரக நலப் பணிகள் இணை இயக்குனரும் கிடைத்த ரகசிய தகவலின்படி மருந்து கடைக்கு சென்ற இணை இயக்குனர் டாக்டர் மாரிமுத்து மற்றும் மாவட்ட மருந்து ஆய்வாளர் சபரிநாதன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருந்தாளுனர் அருள் ஆகியோர் சென்று மெடிக்கல் ஷாப்பில் ஆய்வு நடத்தினர்.

அப்போது சுப்பிரமணி வீரியம் மிகுந்த மருந்துகள் உபயோகிப்பதும் மேலும் நோயாளிகளுக்கு மருத்துவம் அளிப்பதை உறுதி செய்தனர்.

இதன் காரணமாக திருப்பத்தூர் டவுன் போலீசில் இணை இயக்குனர் டாக்டர் மாரிமுத்து அளித்த புகாரின் பேரில் சுப்பிரமணியை கைது செய்து அவர் கர்ப்பிணி பெண்களுக்கு கொடுத்த மாத்திரை மருந்துகளை கைப்பற்றி அனுமதி பெறாமல் மருந்துகள் விநியோகம் செய்த வந்த அவருடைய மெடிக்கல் ஷாப்புக்கு திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம் தலைமையில் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News