இறந்த மனைவிக்கு ரூ.15 லட்சத்தில் கோவில் கட்டிய கணவர்
- திருப்பத்தூர் அருகே வியப்புடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்
- முதலாம் ஆண்டு நினைவு நாளை கொண்டாட ஏற்பாடு
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த மான்கானூர் தக்டிவட்டம் பகுதியை சேர்ந்தவர் சுப் பிரமணி(வயது 60), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி ஈஸ்வரி(55). இவர்களுக்கு திருமணமாகி 35 ஆண்டுகளாகிறது. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஈஸ்வரி உடல்நிலை பாதிக் கப்பட்டு உயிரிழந்தார்.
திருமணம் நடந்தது முதல் இணைபிரியாமல் வாழ்ந்து வந்த நிலையில், மனைவி இறந்ததுக்கத்தை தாங்க முடியாமல் சுப்பிர மணி மன உளைச்சலில் காணப்பட்டார்.
பல நாட்கள் வேதனை யில் தவித்த சுப்பிரமணி, மனைவி ஈஸ்வரிக்கு கோவில் கட்ட முடிவுசெய் தார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் சுப்பிர மணி, அவருக்கு சொந்தமான 15 சென்ட் இடத் தில் ரூ.15 லட்சம் மதிப்பில் கோவில் கட்டி, அதில் 6 அடி உயரத்துக்கு ஈஸ்வரியின் உருவ சிலையை அமைத்தார். அதில் அவருடைய படத்தையும் வைத்துள்ளார்.
மேலும் மனைவியை தெய்வமாக நினைத்து வழி பட்டு வருகிறார். வருகின்ற 31-ந்தேதி முதலாம் ஆண்டு நினைவு நாளை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
சமீபமாக தம்பதியினர் விவாகரத்து கேட்டு நீதி மன்றங்களுக்கு செல்வது அதிகரித்து வரும் நிலை யில், இறந்த மனைவிக்கு கணவர் கோவில் கட்டி வழிபடுவதை அறிந்து பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மனைவிக்கு கணவன் கோயில் கட்டியிருப்பதை தெரிந்து பலர் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.