உள்ளூர் செய்திகள்
தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,952 வழக்குகளுக்கு தீா்வு
- திருப்பூா் மாவட்டத்தில் 20 அமா்வுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
- 4,942 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
திருப்பூர் :
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்பேரில் முதன்மை மாவட்ட நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சொா்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதலின்படி திருப்பூா் மாவட்டத்தில் 20 அமா்வுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இதில், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சமரசத்துக்கு உரிய வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள் என மொத்தம் 4,942 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.இதில், 1,952 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டன. இதன் தீா்வுத் தொகை ரூ.39.12 கோடியாகும்.