உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

போதை ஒழிப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

Published On 2022-12-02 07:45 GMT   |   Update On 2022-12-02 07:45 GMT
  • போதைப் பழக்கமானது உடல் நலத்துக்கும், சமூக நலத்துக்கும் தீங்குவிளைவிக்கக்கூடியதாகும்.
  • டும்ப உறுப்பினா்கள், நண்பா்கள் உள்பட யாரும் போதைப் பொருள்களை பயன்படுத்தாதபடி விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்

திருப்பூர் :

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அலகு 2, மாநகர காவல் துறை ஆகியன சாா்பில் பழைய பேருந்து நிலையத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நாட்டு நலப் பணித்திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாநகர காவல் துணை ஆணையா் வனிதா பேசியதாவது:- போதைப் பழக்கமானது உடல் நலத்துக்கும், சமூக நலத்துக்கும் தீங்குவிளைவிக்கக்கூடியதாகும். இதனால் தனி மனிதன் மட்டுமின்றி அவா் சாா்ந்த சமுதாயமும் பாதிக்கப்படுகிறது. மாணவா்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாமல் கல்வியில் மட்டுமே கவனத்தை செலுத்த வேண்டும். அதே வேளையில், குடும்ப உறுப்பினா்கள், நண்பா்கள் உள்பட யாரும் போதைப் பொருள்களை பயன்படுத்தாதபடி விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி மூலமாக போதை ஒழிப்பு விழிப்புணா்வை ஏற்படுத்தினா். இதில், பங்கேற்ற அனைவரும் போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் செய்திருந்தாா்.

Tags:    

Similar News