திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி
- கோவை சண்டிகேஸ்வரர் நற்பணி மன்றம் சார்பில், 63 நாயன்மார் ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவில், வைகாசி விசாகத்தேர்த்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவில், வைகாசி விசாகத்தேர்த்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, இன்று பஞ்சமூர்த்திகள், 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.
அர்த்தசாம பூஜை அடியார்கள் திருக்கூட்டம், மாணிக்கவாசகர் அடியார்கள் திருக்கூட்டம், கோவை சண்டிகேஸ்வரர் நற்பணி மன்றம் சார்பில், 63 நாயன்மார் ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாயன்மார் உற்சவ திருமேனிகளை, நொய்யல் கரையில் உள்ள வி.ஏ.டி., பள்ளி வளாகத்தில் இருந்து பல்லக்கில் வைத்து, பஞ்சமூர்த்திகளுடன் ஊர்வலமாக எடுத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பள்ளி வளாகத்தில் காலை 9மணிக்கு, 63 நாயன்மார் உற்சவர்களுக்கு திருமஞ்சனம், 11 மணிக்கு மகா தீபாராதனை, 11:15 மணிக்கு அர்ச்சனை வழிபாடு,11:45 மணிக்கு பிரசாதம் வழங்குதல்,அன்னம்பாலிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.