உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

உடுமலை பஸ் நிலையம் அருகே ரவுண்டானா அழகுபடுத்தும் பணி தொடக்கம்

Published On 2022-07-29 08:46 GMT   |   Update On 2022-07-29 08:46 GMT
  • 5 ரோடுகள் சந்திப்பு பகுதியில் இரு ஆண்டுக்கு முன் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.1.50 கோடி செலவில், ரவுண்டானா அமைக்கப்பட்டது.
  • புற்கள், செடிகள் அமைத்து அழகுபடுத்தாமல் விடப்பட்டது.

உடுமலை :

உடுமலை பஸ் நிலையம் அருகே, 5 ரோடுகள் சந்திப்பு பகுதியில் இரு ஆண்டுக்கு முன் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.1.50 கோடி செலவில், ரவுண்டானா அமைக்கப்பட்டது.ஆனால் இப்பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை. புற்கள், செடிகள் அமைத்து அழகுபடுத்தாமல் விடப்பட்டது.

போதை ஆசாமிகள் புகலிடமாகவும், பிளக்ஸ்பேனர்கள் வைக்கும் மையமாகவும், அலங்கோலமாக காணப்பட்டது.நகரின் மையத்திலுள்ள ரவுண்டானாவை அழகுபடுத்த வேண்டும் என 2 ஆண்டுகளாக பொதுமக்கள் வலியுறுத்தி வந்த நிலையில் நகராட்சி சார்பில் ரவுண்டானாவை அழகுபடுத்தும் வகையில் செம்மண் கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ளது.

தொடர்ந்து இங்கு புற்தரை மற்றும் அழகான செடிகள் அமைத்து அழகுபடுத்தவும், சுற்றிலும் கம்பி வேலி அமைத்து பாதுகாக்கவும் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் ராஜேந்திரா ரோடு மற்றும் பழநி ரோடு மையத்தடுப்புகளிலும் புற்கள், செடிகள் வைத்து பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Tags:    

Similar News