உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

பல்லடம் நீதிமன்றத்தில் ரத்ததான முகாம்

Published On 2023-02-11 07:16 GMT   |   Update On 2023-02-11 07:16 GMT
ரத்தம் கொடுப்பது மீண்டும் ,மீண்டும் உடலில் ரத்தம் உருவாகி புத்துணர்ச்சியை ஏற்படுத்தி ஆரோக்கியமாக வைக்க உதவும்.

பல்லடம்:

பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு, வழக்கறிஞர் சங்கம்,திருப்பூர் லயன்ஸ் கிளப் மற்றும் கோவை லைன்ஸ் ரத்த வங்கி ஆகியவை இணைந்து நடத்திய ரத்ததான முகாம் பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சித்ரா தலைமை வகித்தார். வழக்கறிஞர் சங்க செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். ரத்ததான முகாமை பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி துவக்கி வைத்து பேசியதாவது :-

அனைவரும் ரத்தம் கொடுத்தால் உடலுக்கு இடையூறு ஏற்படும் என்று எண்ணுவதை விட்டுவிட்டு ரத்தம் கொடுப்பது மீண்டும் ,மீண்டும் உடலில் ரத்தம் உருவாகி புத்துணர்ச்சியை ஏற்படுத்தி ஆரோக்கியமாக வைக்க உதவும். இதனை அனைவரும் புரிந்துகொண்டு ரத்தம் கொடுக்க முன்வர வேண்டும் என்றார். இந்த முகாமில் 37 பேர் ரத்ததானம் செய்தனர். அவர்களை நீதிபதிகள் சந்தான கிருஷ்ணசாமி, சித்ரா, மற்றும் வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் பாராட்டினர்.

Tags:    

Similar News