உள்ளூர் செய்திகள்

 மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

பல்லடம் அருகே முத்துக்குமாரசாமி மலை கோவிலில் தேரோட்டம்

Published On 2023-04-06 11:13 GMT   |   Update On 2023-04-06 11:13 GMT
  • முத்துக்குமாரசாமி சிலையும், பழநி முருகன் சிலையும் ஒரே உருவ ஒற்றுமையுடன் காணப்படுவது சிறப்பம்சமாகும்
  • 16 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் அமைந்துள்ளது முத்துக்குமாரசாமி மலை கோவில். இந்த கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

இந்த கோவிலில் மூலவராக முத்துக்குமாரசாமி சன்னதியும் மகிமாலீஸ்வரர், மரகதாம்பிகை, பாலகணபதி, நவகிரகம் போன்ற சன்னதிகள் அமைந்துள்ளன. மாதப்பூர் முத்துக்குமாரசாமி சிலையும், பழநி முருகன் சிலையும் ஒரே உருவ ஒற்றுமையுடன் காணப்ப டுவது சிறப்பம்சமாகும். எனவே பழநி மலைக்குச் செல்ல முடியாதவர்கள் மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்குச் சென்று முருகனை தரிசிப்பது வழக்கம்.இந்நிலையில், முத்துக்கு மாரசாமி மலைக்கோவில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் முருகப்பெருமானுக்கு, பன்னீர், சந்தனம், இளநீர், தேன், பால் உள்ளிட்ட 16 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர் பவனியில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் பக்த ர்களுக்கு காட்சியளித்தார்.தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

தேரானது கிரிவலப்பாதை வழியே சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதமும்,அன்னதானமும் வழங்கப்பட்டது. பங்குனி உத்திரவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News