தண்டவாள பராமரிப்பு பணிகள் நிறைவால் கோவை ரெயில்கள் வழக்கம் போல் இயக்கம்
- மதுரை, பாலக்காடு உள்ளிட்ட ரெயில்கள் வழக்கம் போல் கோவை ரெயில் நிலையம் வரை இயக்கப்படும்.
- பயணிகள் வசதிக்காக ரெயில் இம்மாதம் 16, 23 மற்றும் 30 ஆகிய 3 தினங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
தண்டவாள பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததால் மதுரை, பாலக்காடு உள்ளிட்ட ரெயில்கள் வழக்கம் போல் கோவை ரெயில் நிலையம் வரை இயக்கப்படும் என சேலம் ெரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
இது குறித்து சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோவை- போத்தனுார் இடையே ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்ததால், 1ந் தேதி முதல் 20ந் தேதி வரை பாலக்காடு- கோவை (06806), சொரனூர்- கோவை (06458), மதுரை- கோவை (16722), கோவை- கண்ணூர் (16608) உள்ளிட்ட 6 ெரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. பணிகள் முன்கூட்டியே நிறைவடைந்ததால் பழைய அட்டவணை படி ெரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜபல்பூர் - கோவை வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரெயில், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11:50 மணிக்கு ஜபல்பூரில் இருந்து புறப்பட்டு ஞாயிறு கோவை வந்தடையும். பயணிகள் வசதிக்காக இந்த ெரயில் இம்மாதம் 16, 23 மற்றும் 30 ஆகிய 3 தினங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் கோவை - ஜபல்பூர் ரெயில், கோவையிலிருந்து திங்கட்கிழமை புறப்பட்டு ஜபல்பூரை புதன்கிழமை சென்றடையும்.கோவையில் இருந்து புறப்படும் ரெயில் வருகிற 19, 26, ஜூலை 3 ஆகிய 3 தினங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.