கலெக்டர் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்ற கல்லூரி மாணவர்கள்
- போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன்.
- விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கிறிஸ்துராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி சிக்கண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான்முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்துஅவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.
போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதிகூறுகிறேன் என போதைப்பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழியை மாணவர்கள் ஏற்றனர்.
தொடர்ந்து, போதைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கிறிஸ்துராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், உதவி ஆணையர் (கலால்) ராம்குமார், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.