மந்தகதியில் கொப்பரை உற்பத்தி தொழில்
- கோடை வெயில் அதிகரித்துள்ளதால் கொப்பரை உற்பத்திக்குச் சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.
- வெளிமாநில வியாபாரிகளுடன் போட்டி போட்டு தேங்காய்களை கொள்முதல் செய்ய இயலாத நிலை உள்ளது.
காங்கயம் :
தற்போது தேங்காய் சீசன் துவங்கியுள்ளது. கோடை வெயில் அதிகரி த்துள்ளதால் கொப்பரை உற்பத்திக்குச் சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ கொப்பரை 76 ரூபாய்க்கு விலை போகிறது. வெளிச் சந்தையில் கொப்ப ரை மார்க்கெட் சரிந்துள்ள தாலும், அரசு கொள்முதல் துவங்க உள்ளதாலும் விவசாயிகள் தேங்காய்க ளை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.
உணவு மற்றும் தேங்காய் பவுடர் தயாரிப்பு ஆகிய தேவைகளுக்கு தேங்காய் அதிக அளவில் விற்பனை ஆகிறது. எனவே கொப்ப ரை தயாரிப்பா ளர்கள் வாங்கும் விலையை விட வெளிமாநில வியாபாரிகள் தேங்காய்க்கு கூடுதல் விலை கொடுக்கின்றனர்.கொப்பரை தயாரிப்பா ளர்கள் வெளி மாநில வியாபாரிகளுடன் போட்டி போட்டு தேங்காய்களை கொள்முதல் செய்ய இயலாத நிலை உள்ளது. இதனால் கொப்பரை உற்பத்தி தொழில் மந்தக தியில் நடக்கிறது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட உலர்கள உரிமை யாளர்கள் கூறுகையில், கொப்பரை விலையுடன் ஒப்பிடுகையில் ஒவ்வொரு தேங்காயும் 50 பைசா முதல் ஒரு ரூபாய் வரை அதிக விலைக்கு விற்பனை ஆகிறது.தொழிலாள ர்களுக்கு வேலை கொடுத்து அவர்க ளை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக சிறிய அளவில் கொப்பரை உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறோம்.இதே நிலை நீடித்தால் கொப்பரை உற்பத்தியை தொடர முடியாத நிலை ஏற்படும் என்றனர்.