குறைந்த விலையில் விற்பனை செய்பவர்களை நம்பி ஏமாற வேண்டாம் - பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு
- பெண்களிடம் இருந்து பணத்தை ஏமாற்றி சென்று விடுகின்றனர்.
- குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்ய வரும் நபர்களை நம்பி ஏமாற வேண்டும்.
திருப்பூர் :
கடந்த சில நாட்களாக குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்வதாக கூறி வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் பணத்தை ஏமாற்றும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் போலீசார் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதில் வடமாநில இளைஞர்கள் உள்பட ஒருசிலர் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் சென்று, குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்வதாக நைசாக பேச்சு கொடுக்கின்றனர். பின்னர் ஏதாவது மூளைச்சலவை செய்து பெண்களிடம் இருந்து பணத்தை ஏமாற்றி சென்று விடுகின்றனர். இதுபோன்ற ஒருசில சம்பவங்கள் திருப்பூரில் நடைபெற்றுள்ளது.
எனவே வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், அதுபோன்று குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்ய வரும் நபர்களை நம்பி ஏமாற வேண்டும். சந்தேகப்படும்படியாக அந்த நபர்கள் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும்திருமுருகன்பூண்டி போலீசார் பெண்கள் உள்பட பொதுமக்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலமாக அறிவுரையுடன் கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர்.