மழையால் நீங்கிய தீவன பற்றாக்குறை - கால்நடை விவசாயிகள் மகிழ்ச்சி
- திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழையே அதிக மழைப்பொழிவை தரும்.
- ஆடி மாதத்தில் வறண்ட வானிலை காணப்படும்.
திருப்பூர் :
விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் கணிசமான வருமானம் ஈட்டி வருகின்றனர். மழை குறைவாக பெய்யும் காலங்களில் தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டு கால்நடை விவசாயிகள் பெரும் துயரத்தை அனுபவிக்கின்றனர். இந்த ஆண்டு கால்நடை விவசாயிகளுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.
திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழையே அதிக மழைப்பொழிவை தரும். ஆடி மாதத்தில் வறண்ட வானிலை காணப்படும். இதனால், புல்வெளிகள் காய்ந்து பசுந்தீவனங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும்.ஆனால் இந்த ஆண்டு எதிர்பாராத விதமாக தென்மேற்கு பருவமழை கை கொடுத்ததால் ஆடி மாதத்தில் நல்ல மழை பெய்தது. இது புல்வெளிகளை செழிப்படையச் செய்துள்ளது. கோரை, கொழுக்கட்டை, அருகு போன்ற புல் வகைகள் நன்கு வளர்ந்துள்ளது. தீவன பற்றாக்குறை நீங்கி உள்ளதால் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.