திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் பள்ளியில் கோகுலாஷ்டமி விழா
- 9-வது அவதாரமான கிருஷ்ண அவதாரமாக பிறந்த நன்னாளை கோகுலாஷ்டமியாக கொண்டாடுகிறோம்.
- கீதாசாரத்தை பற்றி மாணவர்கள் காட்சிகளாக கண் முன்னே நிறுத்தினர்.
திருப்பூர் :
திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. டிரஸ்ட் நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பிரியாராஜா குத்து விளக்கேற்றினார். இறைவழிபாட்டுடன் விழா தொடங்கியது.
புன்னகையே அன்பின் சின்னம், அன்பு மாறாமல் வாழும் வாழ்வை இறைவன் அருள வேண்டும். திருமாலின் 9-வது அவதாரமான கிருஷ்ண அவதாரமாக பிறந்த நன்னாளை கோகுலாஷ்டமியாக கொண்டாடுகிறோம் என ஆசிரியர்கள் விளக்கம் அளித்தனர். நூற்றுக்கணக்கான மாணவர்களின் கிருஷ்ணர், ராதைகளின் அணிவகுப்பு அரங்கத்தை அலங்கரித்தது. கிருஷ்ணரை பற்றிய உரை, பாடல் மற்றும் கிருஷ்ணரின் பிறப்பும், அதனால் நமக்கு கிடைத்த கீதாசாரத்ைத பற்றியும் மாணவர்கள் காட்சிகளாக கண் முன்னே நிறுத்தினர். விழாவின் நிறைவாக ஒருங்கிணைப்பாளர் அபிதாபானு நன்றி கூறினார்.