உள்ளூர் செய்திகள்
உடுமலை வனப்பகுதியில் தீயை அணைக்கும் பணி தீவிரம்
- 100 ஏக்கர் பரப்பளவில் மரங்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகின்றது.
- வனத்துறை ஊழியர்கள் தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
உடுமலை :
உடுமலை அருகே உள்ள தமிழக -கேரள எல்லை பகுதியான மறையூர், காந்தலூர் பகுதிகளில் நள்ளிரவு முதல் பயங்கரமான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள் என பல்வேறு வகை மரங்கள் உட்பட சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மரங்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகின்றது. வனத்துறை ஊழியர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். மேலும் தமிழக -கேரளா எல்லை பகுதியில் உள்ள வனப்பகுதியில்உடுமலை வனத்துறையினர் கோடந்தூர், ஆட்டுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வனப்பகுதியில் தீ தடுப்பு பணியில் ஈடுபடும் வனத்துறையினருக்கு உணவு மற்றும் உபகரணங்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.